செய்திகள்

முனிச் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்

ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றார். #AlexanderZverev #PhilippKohlschreiber #MunichOpen

மாலை மலர்

முனிச்:

ஜெர்மனியில் முனிச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 

இதில் முதல் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், சக நாட்டு வீரரான பிலிப் கோல்ஸ்ரெய்பரை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஸ்வரேவ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்வரேவ், இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்வரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். #AlexanderZverev #PhilippKohlschreiber #MunichOpen