அதன்படி மசகட்சா, மிர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மிர் 4 ரன்னிலும், அடுத்து வந்த எர்வின் ரன்ஏதும் எடுக்காமலும், டெய்லர் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனால் ஜிம்பாப்வே 14 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு மசகட்சா உடன் மூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது மூர் 52 ரன்கள் எடுத்த நிலையில் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.
அடுத்து மசகட்சா உடன் சிகந்தர் ரசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மசகட்சா சிறப்பாக விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார். ஜிம்பாப்வே அணி 61 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை பெய்தது. இதனால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது. மசகட்சா 101 ரன்னுடனும், சிகந்தர் ரசா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மசகட்டா, சிகந்தர் ரசா ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 246 ரன்னாக இருக்கும்போது மசகட்சா 147 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.