செய்திகள்

ஜிம்பாப்வேயை 67 ரன்னில் சுருட்டி 9.5 ஓவரில் சேஸிங் செய்தது பாகிஸ்தான்

ஜிம்பாப்வேயை 67 ரன்னில் சுருட்டி 9.5 ஓவரிலேயே சேஸிங் செய்து தொடரை 3-0 எனக் கைப்பற்றியது பாகிஸ்தான். #ZIMvPAK #FaheemAshraf

இந்நிலையில் 3-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினார்கள். குறிப்பாக பஹீம் அஷ்ரப் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இவர் 8.1 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்ற ஜிம்பாப்வே 25.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 67 ரன்னில் சுருண்டது.