செய்திகள்

காஷ்மீரில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.

மாலை மலர்

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட வார்புரா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான ஜகிர் முசா என்பவனை பாதுகாப்பு படையினர்  சுட்டுக் கொன்றனர்.

ஒசாமா பின் லேடன் தலைமையில் முன்னர் இயங்கிவந்த அல் கொய்தா அமைப்பின் கிளை அமைப்பாக இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த்  பயங்கரவாத இயக்கம்  இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.