அதன்பின் இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல் என்ற இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இடம்பிடித்தார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் அஸ்வின், ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
சாஹல் 23 ஒருநாள் போட்டியில் 43 விக்கெட்டுக்களும், 21 டி20 போட்டியில் 35 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து, இங்கிலாந்து சென்று விளையாடுகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த மாதம் 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் சுமார் ஒருமாதம் இடைவெளி உள்ளது. சாஹல் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது.
இதனால் இந்த ஒருமாதமும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், சாஹல் அவருடைய பயிற்சியாளராக நரேந்த்ர ஹர்மானி உடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கு முன் நாங்கள் அயர்லாந்து சென்று விளையாட இருக்கிறோம். இங்கிலாந்து சிதோஷ்ண நிலைதான் அயர்லாந்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஒருமாதம் இடைவெளி உள்ளது. அப்போது பயிற்சிக்காக தேசிய அகாடமி செல்ல இருக்கிறேன். அங்கே என்னுடைய பயிற்சியாளர் ஹிர்மானியுடன் ஆலோசனை நடத்துவேன்.