செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை: யுவராஜ்சிங் அணி தோல்வி

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் யுவராஜ்சிங் அணி தோல்வியடைந்தது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடந்த (ஏ பிரிவு) ஒரு ஆட்டத்தில் பஞ்சாப்-அரியானா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் யுவராஜ்சிங் 43 ரன்கள் (77 பந்து, 4 பவுண்டரி) எடுத்து கேட்ச் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய அரியானா அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. கேரளா-பெங்கால் (பி பிரிவு) அணிகள் இடையிலான நடந்த மற்றொரு பரபரப்பான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் (சமன்) முடிந்தது. இதில் 236 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்கால் அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 235 ரன்களே எடுக்க முடிந்தது. பெங்கால் கேப்டன் மனோஜ் திவாரி (73 ரன்) களத்தில் இருந்தும் இலக்கை தாண்ட முடியாமல் போய் விட்டது. 

SCROLL FOR NEXT