இந்த தொடரின் நடப்பு சாம்பியனும், 6-ம் தரநிலை வீரருமான காயல் மோன்பில்ஸ்க்கு எதிராக தொடக்கம் முதலே பாம்ப்ரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.
ஆனால் 2-வது செட்டை 4-6 என இழந்தார். என்றாலும் சுதாரித்துக்கொண்ட யூகி பாம்ப்ரி 3-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி காயல் மோன்பில்ஸ்-க்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தார்.