பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டு வீரர் குனஸ்வரனை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி மற்றொரு இந்திய வீரரான சுமித் நாகலுடன் மோதுகிறார். சுமித் நாகல் கால்இறுதியில் ஸ்லோவெனியாவிள் கவ்சிக்கை 6-3, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார்.