தற்கொலை 
செய்திகள்

வள்ளியூர் அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை

வள்ளியூர் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள ஆச்சியூரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் விசுவநாதன் (வயது 26). இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல அமைதியாக காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசுவநாதன், வீட்டில் யாரும் இல்லாத போது, தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பலியானார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.