செய்திகள்

சங்கரன்கோவிலில் வாலிபர் தற்கொலை

சங்கரன்கோவில் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் திருமலைமுருகன் (வயது25). கூலி தொழிலாளி. மேலும் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த இவரின் பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத போது சால்வையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் பற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT