அரிவாள் வெட்டு 
செய்திகள்

களக்காடு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு- தொழிலாளிக்கு வலைவீச்சு

களக்காடு அருகே பட்டாசு வெடித்த தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

களக்காடு:

 களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேலரதவீதியை சேர்ந்தவர் பால்வண்ண பெருமாள். இவரது மகன் ஆனந்தவேல் (வயது 29).  இவர் தீபாவளி அன்று அப்பகுதியில் நண்பர்களுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே தெருவை சேர்ந்த தொழிலாளி ராசலிங்கம் இங்கு வைத்து பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டது. 

 இந்நிலையில் சம்பவத் தன்று ஆனந்தவேல் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராசலிங்கம் அரிவாளால் ஆனந்தவேலை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

 புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து ராசலிங்கத்தை தேடி வருகிறார்.

SCROLL FOR NEXT