சென்னை:
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 4-ம் தேதி இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்களை நடுவழியில் நிறுத்தி ஆங்காங்கே பயணிகளை இறக்கி விட்டதால் தவிப்புக்குள்ளானர்கள். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
நிலைமையை சமாளிக்க தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் டிரைவர்கள், கண்டக்டர்களை பணியில் அமர்த்தி அவர்களைக் கொண்டு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. என்றாலும், தற்காலிக டிரைவர்களால் விபத்துக்கள் ஏற்படுவதால் பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை சாந்தோமில் தற்காலிக டிரைவர் அரசு பேருந்தை இன்று ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் என்பவர் மீது பேருந்து திடீரென மோதியது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். #TNTransportstrike #Busstrike #TamilNews