பலி 
செய்திகள்

ரத்தினகிரி அருகே கல்குவாரியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் பலி

ரத்தினகிரி அருகே சுமார் 100 அடி ஆழமுள்ள கல்குவாரியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பு, இவருடைய மகன் குமரேசன் (வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இந்தநிலையில் நேற்று காலை ரத்தனகிரியை அடுத்த மேலகுப்பம் பகுதியிலுள்ள சுமார் 100 அடி ஆழமுள்ள கல்குவாரியில் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை செய்ததில், கல்குவாரி பள்ளத்தில் விழுந்து இறந்து கிடந்தது மேலகுப்பத்தை சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.