சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் நேற்று இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயிலில் வந்துள்ளார். கடைசி ரெயில் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில், ரெயில் சிந்தாதிரிபேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அந்த பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது பயந்துபோய் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சிவாஜி, அங்கு விரைந்து சென்றார். அப்போது ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த வாலிபரை மடக்கிப்பிடித்த போலீஸ்காரர் சிவாஜி, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.