கைது 
செய்திகள்

மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்- ‘போக்சோ’ சட்டத்தில் கைது

தானிப்பாடி அருகே ஆசைவார்த்தை கூறி 9-ம் வகுப்பு மாணவியை வாலிபர் கர்ப்பிணியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் தந்தை இறந்த நிலையில் அவரது 18 வயது மற்றும் 15 வயது சிறுமிகள் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இவர்களில் 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் ஊரை சேர்ந்த சின்னராசு மகன் மனோஜ் (வயது 19) என்பவர் 9-ம் வகுப்பு மாணவியுடன் நட்பாக இருந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக மனோஜ் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய மாணவி மனோஜின் ஆசைக்கு இணங்கினாள். தற்போது அவள் கர்ப்பிணியாகி விட்டாள்.

இதனை இருவரும் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாணவிக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாட்டி விசாரித்தபோது நடந்த உண்மையை மாணவி தெரிவித்தாள்.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அவர் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சந்திரா உத்தரவின்பேரில் மனோஜை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.