கைது 
செய்திகள்

ஆரணி அருகே ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான வாலிபர் கைது

ஆரணி அருகே ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

ஆரணி:

செய்யாறு அருகே உள்ள சிறுகட்டூரை சேர்ந்தவர் சக்தி (வயது 46). இவர் கடந்த 2004-ம் ஆண்டு அடிதடி வழக்கில் மோரணம் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். பின்னர் சில நாட்களில் ஜாமீனில் வெளி வந்து தலைமறை வாகிவிட்டார். 

இவறை திட்டமிட்ட குற்ற நுன்னறிவு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.  

இந்நிலையில் சக்தி முனுக்கப்பட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகிசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்தியை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT