கோப்புபடம் 
செய்திகள்

சமூக வலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த வாலிபர் கைது

கோவை அருகே சமூக வலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

தமிழகத்தில் சமூக வலை தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை பதிவேற்றம் செய்யவும், பார்க்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை கண்காணிப்ப தற்காக சென்னை கூடுதல் டி.ஜி.பி. ரவி தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் யாராவது குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கிறார்களா? என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவை காட்டூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ராம்நகரை சேர்ந்த பாலகிருஷ்ண தாஸ் என்கிற பாலாஜி (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் சமூக வலை தளத்தில் தனியாக முகவரியை உருவாக்கி அதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். மேலும் ஏராளமான படங்களை பதிவிறக்கமும் செய்து உள்ளார்.

இதனை கண்காணித்த போலீசார் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் சென்னை போலீசார் அனுப்பிய முகவரியை ஆய்வு செய்து பாலகிருஷ்ண தாஸ் என்கிற பாலாஜியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT