கைது 
செய்திகள்

திருபுவனையில் தனியார் தொழிற்சாலையில் திருடிய வாலிபர் கைது

திருபுவனையில் தனியார் தொழிற்சாலையில் புகுந்து பேட்டரிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திருபுவனை:

திருபுவனையை அடுத்த திருபுவனை பாளையத்தில் மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.

சம்பவத்தன்று மர்ம நபர்கள் இந்த தொழிற்சாலைக்குள் புகுந்து அங்குள்ள ஜெனரேட்டர் அறையில் வைத்திருந்த 2 பேட்டரிகளை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரமாகும்.

இதுகுறித்து தொழிற்சாலை அதிகாரி அசோக் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் அஜய் மற்றும் போலீசார் நேற்று இரவு திருவாண்டார் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 28) என்பதும், இவர் மருந்து தொழிற்சாலையில் புகுந்து பேட்டரிகளை திருடி சென்றவர் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும் சரவணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதரில் மறைத்து வைத்திருந்த 2 பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.