கைது 
செய்திகள்

கோவையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபர் கைது

கோவை காந்திமாநகர் மைதானம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை காந்திமாநகர் மைதானம் அருகே சிலர் மது பாட்டில்களை திருட்டுதனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT