கோப்பு படம் 
செய்திகள்

தென்பெண்ணையாற்றில் மினிலாரியில் மணல் கடத்திய வாலிபர் கைது

சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பாகூர்:

பாகூர் போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் நேற்று சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆற்றில் மினி வேன் மூலம் மணல் ஏற்றி வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்(வயது31) என்பதும் இவர் தென் பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மினிலாரியை பறிமுதல் செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.