கைது 
செய்திகள்

திருவண்ணாமலை காடுகளில் வனவிலங்குகள் வேட்டையாடிய வாலிபர் கைது

திருவண்ணாமலை காடுகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனவிலங்குகளை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள காடுகள் வேடியப்பன் மலைப்பகுதிகளில் சுற்றித்திரியும் வனவிலங்குகள் மற்றும் அங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆடு கோழி ஆகியவற்றை கொன்று வேட்டையாடி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் வந்தது.

போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வேடியப்பனூர் ஒட்டியுள்ள புனல் காடு பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் வாணாபுரம் அடுத்த மெய்யூர் ஓம் சக்தி நகரை சேர்ந்த தங்கம் (வயது 37) என்பதும் வன விலங்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. அவரை கைது செய்து வேட்டைக்குப் பயன்படுத்திய கள்ள துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT