கொலை 
செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்-இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை

மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மற்றும் இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொலை மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள திருவாதவூரை சேர்ந்தவர் விமல். இவரது மனைவி ஆயம்மாள் (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆயம்மாள் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் அன்புநாதன் (28). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். இன்று காலை அன்புநாதன் ஆயம்மாளை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வெளியே சென்றார். திருவாதவூர் தெற்குத் தெருபாலம் பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் அன்பு நாதனையும், ஆயம்மாளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர்.

இருவருக்கும் தவறான பழக்கம் இருந்ததால் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT