இதனால் நமது வேலையும் பாதித்து, உடல் நலமும் கெடுகிறது. இதிலிருந்து நம்மை விடுவிக்கவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ‘யுவர் ஹவர்’ (your hour) ஆன்ட்ராய்டு செயலி (ஆப்). இந்த செயலியில் இருக்கும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவோரை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்.
ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தததும், நாம் ஒரு நாளில் எத்தனை முறை ஸ்மார்ட்போனை அன்லாக் செய்திருக்கிறோம், எவ்வளவு நேரம் உபயோகித்து இருக்கிறோம் போன்ற தகவல்களை நமக்கு இந்த செயலி தெரியப்படுத்துகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு நாம் எவ்வளவு நேரம் போனில் நேரம் செலவிட்டு இருக்கிறோம் என்பதையும் கணக்கிட்டு காண்பிக்கிறது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற மற்ற வலைத்தளங்களில் நாம் செலவிட்ட நேரத்தையும் துல்லியமாக சொல்லிவிடுகிறது. இத்துடன் அதற்கான வரைபடமும் (graph) போட்டு காண்பித்து விடும். இதை வைத்து நாம் போன் உபயோகிப்பதில் எந்த நிலையில் இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடியும்.