திருவள்ளூர்:
திருத்தணி ஆறுமுகசாமி கோவில் பகுதியைச் சேர்ந்த தங்கவேல். இவருக்கும் திருத்தணியை அடுத்த பெருமாள் தாங்கள், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து தங்கவேல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆனந்தி திருத்தணி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்தார். ஆனால் இதில் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து ஆனந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் முன்பு பதாகைகளை ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்திய தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நட வடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.