விஷம் 
செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சின்ன வண்ணான்குப்பம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். விவசாயி. இவரது மகள் சவுமியா (19). 10-ம் வகுப்பு வரை படித்திருக்கும் சவுமியா பூப்பறிக்கும் வேலை செய்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் வெறுத்து போன அவர் வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT