தாக்குதல் 
செய்திகள்

திருச்செந்தூர் அருகே இளம்பெண் மீது தாக்குதல்- 3 பேர் மீது வழக்கு

திருச்செந்தூர் அருகே ஆடு வீட்டிற்குள் புகுந்து அரிசி தின்ற தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் முத்து மாலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகள் முத்துலட்சுமி (வயது20). இவர் சொந்தமாக ஆடு வைத்து வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடு அருகில் உள்ள ரவி என்பவரது வீட்டில் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசியை தின்றதாக தெரிகிறது.

இதுகுறித்து ரவியின் மனைவி சுமதி, முத்துலட்சுமியிடம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சுமதி, முத்துலட்சுமியை அடித்து உதைத்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சுமதி அவரது உறவினர்கள் சாமிக்கண், மகேந்திரன் ஆகியோர் மீது திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT