செய்திகள்

செம்மஞ்சேரி விடுதியில் இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மி‌ஷம்- காவலாளி கைது

செம்மஞ்சேரி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

செம்மஞ்சேரி பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான இளம் பெண்கள் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இந்த விடுதியில் 2-வது தளத்தில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தங்கி உள்ளார். அதே பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்தார்.

காற்றுக்காக இரவு நேரத்தில் தனது அறையின் கதவை லேசாக திறந்து வைத்துக் கொண்டு தூங்கினார். நள்ளிரவில் அவரது அறையில் புகுந்த விடுதி காவலாளி சுபாஷ் அந்த பெண்ணிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சல் போட்டார். விடுதியில் தங்கி இருந்த மற்ற பெண்கள் ஓடி வந்தனர். அதற்குள் சுபாஷ் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாசை கைது செய்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக விடுதியில் காவலாளியாக பணியாற்றியது தெரிய வந்தது. #Tamilnews

SCROLL FOR NEXT