கைது 
செய்திகள்

திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை உறவுக்கு அழைத்த வாலிபர் கைது

திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை உறவுக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 42). இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த பெண்களை கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணை கேலி செய்ததுடன் அவரை தகாத உறவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இத குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறினார். பெண்ணின் தாய் பஞ்சவர்ணம் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரவி இது குறித்து வழக்குபதிவு செய்து சின்னச்சாமியை கைது செய்தார். மேலும் அவரை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில அடைத்தார்.

SCROLL FOR NEXT