சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம், டரன் டரன் மாவட்டத்தில் உள்ள நவுஷேரா தல்லா கிராமத்தை சேர்ந்தவர் அமன்பிரீத் கவுர்(23). அதே கிராமத்தை சேந்த அமன்தீப் சிங்(24) என்பவரை உயிருக்கு உயிராக காதலித்துவந்த அமன்பிரீத் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், அமன்தீப் சிங் மற்றும் அவரது மனைவி அமன்பிரீத் கவுர் ஆகியோர் இன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த அமன்பிட்ரீத் கவுரின் உறவினர்கள் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த இளம் தம்பதியரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
கவுரவ கொலை என வர்ணிக்கப்படும் இந்த சம்பவம் குறித்து விசாரித்துவரும் போலீசார், அமன்பிரீத் கவுரின் உறவினர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.