செய்திகள்

அ.தி.மு.க. எம்.பி.க்கு எலி மருந்து அனுப்பிய வாலிபர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க. எம்.பி.க்கு கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த வாலிபர் கூரியர் மூலம் ஒரு மனு மற்றும் எலி மருந்து பார்சல் அனுப்பினார்.

மாலை மலர்

கோவை:

கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி. இவர் இன்று டெல்லியில் உள்ள எம்.பி.க்கு கூரியர் மூலம் ஒரு மனு மற்றும் எலி மருந்து பார்சல் அனுப்பினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களில் ஒருவரான நான் வைக்கும் கோரிக்கை, உங்கள் கட்சி சார்பாக 37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழக விவசாயிகளின் பல வருட பிரச்சனைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்காக ராஜினாமா செய்யாமல் தற்கொலை செய்வோம் என்று டெல்லியில் தங்கள் கட்சியை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் பேசியது வரவேற்கத்தக்கது. 37 பேரும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்சனையை தீர்க்கவும். தங்களுக்கு உதவும் நோக்கில் எலி மருந்து அனுப்புகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். #Tamilnews