மரணம் 
செய்திகள்

அரூர் அருகே வீட்டின் முன்பு மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

அரூர் அருகே வீட்டின் முன்பு திடீரென மயங்கி கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாமக இறந்து போனார்.

மாலை மலர்

அரூர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (வயது23) கூலித்தொழிலாளி. இவர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பூர்ணம்பட்டியில் உள்ள தனது பாட்டி குழந்தையம்மாள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டின் முன்பு திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய  அவர் மறுநாள் மீண்டும் உடல் நிலை மோசமானதால் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.