செய்திகள்

பக்கிங்காம் கால்வாயில் விழுந்த வாலிபர் பிணமாக மீட்பு

பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் கமலேஷின் உடல் பேசின் பிரிட்ஜ் பக்கிங்காம் கால்வாய் அருகே பிணமாக மீட்கப்பட்டது.

பெரம்பூர்:

கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. அதனால் குப்பைகள் பேசின் பிரிட்ஜ் ரெயில்வே தண்டவாளத்தில் சிக்கியது. எனவே, ரெயில்வே பொதுப் பணித்துறை, ஒப்பந்த ஊழியர்கள் தண்டவாளத்தில் நின்றபடி அவற்றை அகற்றினார்.

அப்போது கோட்டை பகுதியை சேர்ந்த ஊழியர் கமலேஷ் (19) கால்வாயில் தவறி விழுந்தார். அவரது உடலை தேடும் பணியில் வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கமலேஷ் உடல் பேசின்பிரிட்ஜ் பக்கிங்காம் கால்வாய் அருகே மீட்கப்பட்டது.

SCROLL FOR NEXT