பள்ளிப்பட்டு:
திருத்தணி பகுதியில் சிலருக்கு மான்கறி கிடைப்பதாக மாவட்ட வன அலுவலர் முகமது ஷகீப்புக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி திருத்தணி வனச்சரகர் வாசு தலைமையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அவர்கள் சென்னை- திருப்பதி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் திருத்தணியை அடுத்த காசிநாதபுரத்தை சேர்ந்த முருகன் என்பதும் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ மான் கறி இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து முருகனை கைது செய்தனர். அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மான்கறி வாங்கி வந்ததாக தெரிவித்து உள்ளார். மானை வேட்டையாடுபவர்கள் குறித்து அங்குள்ள வன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.