செய்திகள்

கேரளாவில் இருந்து புளியரை வழியாக பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

கேரளாவில் இருந்து அரசு பேருந்தில் மதுபாட்டில் கடத்தியது தொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை வழியாக வாகனங்களில் கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதும், அங்கிருந்து தமிழகத்திற்குள் கொண்டு வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து அரசு பேருந்து தென்காசி செல்வதற்காக புளியரை சோதனை சாவடி வந்தது. அப்போது போலீசார் பேருந்தில் உள்ளே சென்று சோதனை செய்த போது அங்கு சந்தேகம்படும்படியாக ஒருவர் இருந்தார். அருகில் ஒரு பேக் இருந்தது. அதை போலீசார் திறந்து பார்த்தபோது 20 மதுபாட்டில்கள் இருந்தது.

இதையடுத்து அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அவர் தேவிபட்டணத்தை சேர்ந்த வன்னியராஜ்(வயது 35) என்றும்,  கேரளாவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து புளியரை சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு வழக்கு பதிவு செய்து வன்னிராஜை கைது செய்தார். #tamilnews

SCROLL FOR NEXT