ஆரணி:
சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 28). டிப்ளமோ படித்தவர். இவர், இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த விஷப் பாம்பு, அவரை கடித்தது.
தூக்கத்தில் இருந்து அலறி எழுந்த செந்தில் குமார் தன்னை கடித்த பாம்பை அடித்து கொன்றார். இதையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது.
ஆம்புலன்சில் தன்னை கடித்த பாம்புடன், செந்தில்குமார் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பயணம் செய்தார். ஆஸ்பத்திரிக்கு வந்தவுடன், ஆம்புலன்சில் இருந்து இறங்கி பாம்பை தூக்கிக் கொண்டு டாக்டரை நோக்கி ஓடினார்.
டாக்டர்களிடம் நடந்ததை கூறினார். உடனடியாக விஷத்தை முறிக்க செந்தில் குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ பரி சோதனையில் அவரை, கடித்தது கொடிய விஷம் கொண்ட பாம்பு இல்லை என்று தெரியவந்தது.
சிகிச்சைக்கு பிறகு, அவர் குணமடைந்தார். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.