தற்கொலை 
செய்திகள்

திருச்சியில் இளம்பெண் தற்கொலை

திருச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் மணிமேகலை (வயது 29). இவரது கணவர் கவியரசு கே.கே. நகர் பகுதியில் ஐஸ்கிரீம் நிறுவனம் நடத்தி வந்தார். 

கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொழிலில் நஷ்டம் அடைந்தார். இதனால் மனவேதனையில் இருந்த மணிமேகலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.