அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி வலையர்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கட்டசுப்பையா மகன் முருகன்(வயது 25). அதே ஊரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், இவரது குடியிருப்பு பகுதியில் சைக்கிள் ஓட்டி பழகினாராம். அவரிடம், முருகன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுவாமிநாதன் விசாரணை நடத்தினார். பின்னர் சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.