மாயம் 
செய்திகள்

மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண் மாயம்

மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள உதிரமாடன்குடியிருப்பு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அன்னலட்சுமி (வயது23) . ராமச்சந்திரன் கோவையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹர்ஷிகா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவனை விட்டு பிரிந்து அன்னலட்சுமி உதிரமாடன் குடியிருப்பில் உள்ள தனது தாயாரான சரஸ்வதி வீட்டில் வசித்து வருகிறார். 

இந்தநிலையில் அன்னலட்சுமியிடம் சமாதானம் பேசி கணவருடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்தனர். கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் அன்னலட்சுமி வீட்டைவிட்டு நேற்று காலையில் மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. 

இதுகுறித்து அவரது தாயார் சரஸ்வதி மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னலட்சுமியை தேடி வருகின்றனர்.