கைது 
செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தவர் கைது

ஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள முத்தனம்பட்டி தெற்குதெருவை சேர்ந்த தொந்திகவுண்டர் மகன் ராஜ்குமார்(36). விவசாய கூலிவேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கீழமுத்தனம்பட்டி வடக்குதெருவை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணை வலுக்கட்டாயமாக வயலுக்கு தூக்கி வந்தார்.

பின்னர் அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்தார். மேலும் உடலின் பல இடங்களில் கடித்து காயத்தை ஏற்படுத்தினார்.

அவ்வழியே வாகனம் வரும் சத்தம் கேட்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறினார். படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து க.விலக்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.