பாகூர்:
அரியாங்குப்பம் மணவெளி தொகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 39). இவர் கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் (32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதில் ஒருவர் உடல் ஊனமுற்றவர். இதனால் காளியம்மாள் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
மேலும் கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் அவர் மது குடித்து வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் காளியம்மாள் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மிரட்டல் விடுப்பார்.
அதே போல் நேற்று மது குடித்து விட்டு வந்து சேகர் தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த காளியம்மாள் தற்கொலை செய்வதாக கூறி வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டார். சேகர் வழக்கம் போல் மிரட்டுகிறார் என கண்டு கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் சிறிது நேரம் ஆகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து சேகர் பார்த்த போது, மின் விசிறியில் காளியம்மாள் தூக்கில் தொங்கினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர் காளியம்மாளை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews