செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

கை-கால்களை கட்டிப்போட்டு இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கீழமாளிகை கிராமத்தை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் முரளி (வயது 24). சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு  வந்த உறவினர் மகளை, முருகேசன் அங்குள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றதோடு, வாயில் துணி வைத்தும், கை கால்களை கட்டி போட்டும் பலவந்தமாக கற்பழித்துள்ளார்.

இதனால் அந்த பெண் இதுபோல் செய்து விட்டாயே? என்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என கேட்டு அழுதபோது, வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம், தானே திருமணம் செய்து கொள்வதாக கூறி தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுடன் முரளி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார்.

இந்நிலையில் கடந்த 13-ந்தேதி உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முரளி திருமணம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக முரளியிடம், பாதிக்கப்பட்ட பெண் தட்டிக்கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதையடுத்து அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குபதிவு செய்து முரளியை கைது செய்து விசாரித்து வருகிறார்.