செய்திகள்

கல்லாவி அருகே இளம்பெண் மாயம்

கல்லாவி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.

மாலை மலர்

சிங்கார பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவரது மனைவி மாலதி (வயது 24). இவர்களுக்கு திருமணம் நடந்து 3 வருடங்கள் ஆகிறது.இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் கணவன் -மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மாலதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சக்திவேல், மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் மாலதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் சோகம் அடைந்த சத்திவேல் நடந்த சம்பவம் குறித்து கல்லாவி போலீஸ் நிலையத்தில் தெரிவித்து புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வீரப்பன் வழக்குப்பதிவு செய்து, மாயமான இளம்பெண் மாலதியை தேடி வருகிறார்.