செய்திகள்

வால்பாறையில் இளம்பெண்ணை கற்பழித்த தொழிலாளி கைது

இளம்பெண்ணை கற்பழித்த தொழிலாளியை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் தனபால். கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் உடல்நிலை சரியில்லாததால் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரகுநாத் (32). என்ற எஸ்டேட் தொழிலாளி. அத்துமீறி தனபாலின் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் அங்கு படுத்து இருந்த தனபாலின் 18 வயது மகளை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார்.

இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். மகளின் அலறல் சத்தம் கேட்டு தனபாலன் திடுக்கிட்டு எழுந்தார். இதனை பார்த்த ரகுநாத் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் தனபால் தனது மகளை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த தகவல் கிடைத்ததும் வால்பாறை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரகுநாத் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews