செய்திகள்

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் கொத்தனார் தற்கொலை

புதுவை அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த ஆரோவில் நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 51). கொத்தனார். இவருடைய மனைவி லட்சுமி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குடிப்பழக்கம் கொண்ட பொன்னுசாமி மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். அதேபோல் நேற்று மனைவி லட்சுமியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

மனைவி பணம் கொடுக்காததால் பொன்னுசாமி வீட்டில் யாரும் இல்லாதபோது மனைவி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.