யோகி ஆதித்ந்யநாத் 
செய்திகள்

500 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது- யோகி ஆதித்யநாத் பெருமிதம்

பல தலைமுறையை சேர்ந்த பக்தர்களின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது என உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

அயோத்தி:

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில்  பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பங்கேற்ற உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. 500 ஆண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. பக்தர்களின் பிரார்த்தனை இன்று நிறைவேறியுள்ளது.

பல தலைமுறையை சேர்ந்தவர்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. அயோத்தி நகரை உலகின் சிறந்த நகராக உருவாக்குவோம்

ராமர் கோவில் கட்டும் பணிகளை ராமர் கோவில் அறக்கட்டளை இனி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT