செய்திகள்

பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற யோகா ஆசிரியர் கைது

மும்பையில் பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலை மலர்

========

மும்பை:

மும்பை நகரின் செவ்ரி என்ற பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் சிவ்ராம் ராவுட்(57) என்பவர் கடந்த சில வருடங்களாக யோகா வகுப்புகள் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், செவ்ரி பகுதியில் உள்ள ஆர்.ஏ.கே.மார்க் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் சிவ்ராம் ராவுட் மீது கடந்த வாரம் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அந்த புகாரில், ராவுட் வகுப்பின் போது தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியரை அவரது இல்லத்தை வைத்து நேற்று கைது செய்தனர்.

புகார் அளித்த பெண்ணின் கணவரும் அதே ராவுட் எடுத்த யோகா வகுப்பில் தான் பயின்று வந்தார். மனைவியுடன் அவரும் சேர்ந்து வந்து புகார் அளித்தார். தங்கள் புகாரை தொடர்ந்து மேலும் சிலர் புகார் அளிக்க முன் வந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக யோகா ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.