சனா:
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் துக்யாடா மாகாணம் ஹொடிடாஹ் மாவட்டத்தில் உள்ள அரசுப்படையினரின் நிலைகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு உடனடியாக அரசுப்படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.