தாக்குதல் நடந்த இடம் 
செய்திகள்

ஏமன்: ராணுவ அணிவகுப்பு மீது ஏவுகணை தாக்குதல் - 9 வீரர்கள் பலி

ஏமன் நாட்டின் தெற்கு மாகாணத்தில் இன்று ராணுவ அணிவகுப்பு மீது ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராகஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அல்-தலேயா மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் பயிற்சி முடிந்து வெளியேறும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இன்று நடந்தது.