எடியூரப்பா தலைமையிலான மந்திரிசபை 
செய்திகள்

கர்நாடகாவில் 3 பேர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர்

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருக்கும் நிலையில், மூன்று பேர் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

கர்நாடகாவில் குமாரசாமி தலைமயிலான அரசு கவிழ்ந்த நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். நீண்டு நாட்களாக மந்திரி சபை விஸ்தரிப்பு நடைபெறாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்மந்திரி சபை விஸ்தரிக்கப்பட்டது. 17 பேர் மந்திரியாக பதவி ஏற்றனர். ஆனால் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று பதவி ஏற்றுக் கொண்ட மந்திரிகளுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன. அத்துடன் கோவிந்த் கர்ஜோல், அஷ்வத் நாராயண், லட்சுமணன் சவாதி ஆகியோர் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராகவும், மூன்று பேர் துணை முதல்வராகவும் செயல்படுவார்கள்.