திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் எமதர்ம ராஜனுக்கு தனிக்கோவில் உள்ளது. காலத்தால் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு கோவிலுக்கு சென்ற மர்ம மனிதர்கள், சுவாமி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை தூக்கிச் சென்று, கோவிலின் அருகே உள்ள வயலில் போட்டு உண்டியலை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர் இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு கொள்ளை சம்பவம் இந்த கோவிலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம் பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.